Friday, May 28, 2021

தந்தையின் தாயைக் காண இரயில் பயணம்


         அது ஒரு காலம்.. இப்படி எல்லாருக்குமே ஒரு கடந்த  இல்லை  வசந்த காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா. எனக்கும் அப்படி இருந்தது.. வருடா  வருடம்  பள்ளி விடுமுறை நாட்களில், நானும் ஊருக்கு போவேன், அதுவும் இரயில் பயணம். என் அம்மா அப்பா சொல்வார்கள்  இரவில்  இரயில் ஏறுவது உத்தமம் என்று. ஏனென்றால் குழந்தைகள் நாங்கள் சன்னலோரம் இருக்கை வேண்டும் என்று அடம் பிடிக்க இயலாது.  அதுவும் இல்லாமல் இரயில் ஏறிய சில நிமிடங்களில் உறங்கிவிடுவோம் என்று .. என்ன ஒரு கணக்கு!!! :) 


        அவர்கள்  சொன்னதும் சரி தான். என் அண்ணன் எப்படியோ எனக்கு தெரியாது ,ஆனால் நான் பகல் நேரத்தில்  இரயில் ஏறினால்  சன்னல் ஓரம் இருக்கை வேண்டும் என்று கடவுளை தொழ ஆரம்பித்து விடுவேன். அப்படி கிடைத்து விட்டால் எனக்கு  நானே சொல்லிக் கொள்வேன், பார்த்தாயா  நான் நல்ல பிள்ளையாக  இருந்ததினால் தான் சாமி எனக்கு சன்னலோரம் இருக்கை  கொடுத்தாரென. இப்போது  நினைத்தாலும்  சிரிப்பு தான் வருகிறது. 

         சரி பகலில் இரயில் ஏறினால் நிறைய சலுகை இருக்குமே. :) என் அப்பா சாப்பிடுவதற்கு நொறுக்குத் தீனி , படிக்க சில மாத பத்திரிக்கைகள் வாங்கித் தருவார். நானும் அண்ணனும் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு பனைமரம் , தென்னை மரம் எத்தனை உள்ளது என்று என்ன ஆரம்பித்து விடுவோம் :) 


            ஊருக்கு போய் சேருகிற  நேரம் ஞாயிறு தன் நெற்றியை காண்பிக்கும் நேரம். மெல்ல மெல்ல  விடியல் தொடங்கும். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். என் பாட்டி பரபரவென்று  சமைத்துக் கொண்டு இருப்பார்கள். என் அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரும் சுடச்சுட இட்லி சாப்பிடுவார்கள். எனக்கு முந்தின நாள் இரவு வடித்த சாதத்தில்  புளி ஊற்றி வைத்து அதை வாணலியில் வெங்காயம் , வர மிளகாய் சில போட்டு சுடச்சுட தாழித்து  தருவார்கள் என் தந்தையை பெற்ற தாய். ஆகா என்ன மணம் , சுவை !!! அந்த கைப் பக்குவம் யாருக்கு வரும். இன்று நாமும் சமைக்கிறோம் , சுவையாகத்தான். ஆனால் நம் முந்தையவர்களிடம் இருந்த ஏதோ ஒன்று இன்று நம்மிடம் இல்லை. அவர்கள் குறைவான பொருள்களுடன் சுவையாக சமைத்தார்கள். நம்மில் பலர் நிறைய பொருள்கள் சேர்த்து சுவையாக இல்லையே என்று புலம்புகிறோம்.  

            என் பாட்டிக்கு, எங்க அண்ணனை  தான் மிகவும்  பிடிக்கும். பேரன் அல்லவா, நான் பேத்தி தானே ! அப்படி என்ன அவன் மேல் மட்டும் அப்படி ஒரு பாசம் ? ஏன் பாட்டி உங்களுக்கு அண்ணனை தானே மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் , ஒரு சிறிய புன்னகை.  அந்த ஒரு புன்னகையின் அர்த்தம், ஆமாம்  எனக்கு என் பேரன் தான் என்று சொல்லி விடும். 

            ஒரு பாட்டிக்கு என் அண்ணனை பிடிக்கும் போது , என்னை பிடிக்க ஒரு பாட்டி இருக்க மாட்டாரா என்ன !! :) 



  

Thursday, May 27, 2021

மன்னரும் குறிப்பறிவானும் - திருக்குறளில் எந்த அதிகாரம் ?

                                          மன்னரும் குறிப்பறிவானும்     

                            ஒரு சமயம் ,தெளிவ நாட்டை ஆண்டு வந்த மன்னர் மன்னன் ஒரு சிக்கலில் மாட்ட , மன்னர் எப்போதெல்லாம் சிக்கலில் மாட்டுகிறாரோ அப்போதெல்லாம் தெனாலி போல குறிப்பறிவானும் மன்னரை காப்பாற்றுவது தான் தலையாய கடமையாக இருக்கும். சரி, கதைக்கு வருவோம். 

                            சிக்கலில் மாட்டிய மன்னரை அவர் கூறாமலேயே காப்பாற்றுவது தான் நம் அமைச்சன் குறிப்பறிவானின் திறமை (1) . எப்போதும் போல மன்னரை இந்த முறையும் காப்பாற்ற அமைச்சனுக்கு பாராட்டோ பாராட்டு. 

                            சபை கலைந்தது. மன்னர் தன் மாளிகைக்கு திரும்ப , சபையில் நடந்தததை அவர் விளக்க , அரசிக்கு மன நிம்மதி.  அரசிக்கு குறிப்பறிவானை தெய்வத்துக்கு நிகராக எண்ணினார்(2). மேலும் மன்னனிடம் , குறிப்பறிவானை என்றென்றும் உங்களோடு வைத்துக் கொள்க , அதுவே நமக்கும் நம் ஆட்சிக்கும் நல்லது என்றார்(3).  

                         மன்னர் மன்னன் அரசியின் சொற்களுக்கு செவி மடுத்தார். மேலும் அவருக்கு வியப்போ வியப்பு. தன்னை சிக்கலில் மாட்ட வைக்க நினைத்தவர்களின் மனத்தை தெரிந்து எப்படி தன்னை விடுவித்தார் என்று கேட்டறிய காவல் வீரனை அமைச்சனை கூட்டி வர உத்தர விட்டார். 

                        இத்தனை பிரச்சனைக்கும் காரணமான தலைமை அமைச்சனை நினைத்து வருந்தினார்  அரசி. குறிப்பறிவானும் தலைமை அமைச்சனும்  உறுப்போடு ஒத்திருந்து என்ன பயன்(4) ? தலைமை அமைச்சனுக்கு இருக்க வேண்டிய வல்லமை இல்லையே என்று வருந்தினார். எதிரியின் புறத்தை மட்டுமே கண்டு ஏமாறி , அவர்களின் அகத்தில்  உள்ள உண்மையான குறிப்பை காணாமல் விட்ட அமைச்சனை பற்றிக் கூறி , எதிர்காலத்தில் இதுவே நமக்கு ஆபத்து என்று உணர்ந்தனர்(5)

                        குறிப்பறிவான்  அரசனுக்கும் அரசிக்கும் வணக்கம் செலுத்தினார் . அரசன் அமைச்சரை உட்காரச் செய்தார். அரசிக்கு ஒரே ஆர்வம் , அமைச்சரின் சாதுரியத்தை அறிய ! . அமைச்சர் தான் முகத்தை வைத்தே அவரவரின் எண்ண ஓட்டங்களை அறிய கூடியவர் ஆச்சே !(6) அரசியார் கேட்கும் முன்பே  அமைச்சர் இவ்வாறு சொன்னார் , "ஒருவரின் முகமே அவரவர் எண்ணங்களை வெளிப்படுத்தும் கண்ணாடி"(7). அமைச்சரின் இத்தகைய திறன்(8) பெற்று விளங்கும் அமைச்சரை  கண்டு உளம் மகிழ்ந்தார் அரசி.  

                        அரசரோ ஒருவரின் எண்ணங்களை தன் கண்கள் மூலமே எடைப்போட்டு , அவர் நட்பானவாரா இல்லை பகைமை உணர்வோடு(9) நம்மிடம் பழகுகிறாரா என்பதை ஆராய்ந்து தனக்கு உணர்த்துகின்ற அமைச்சரை ஆரத் தழுவிக் கொள்கிறார். மேலும் நுட்பமான அறிவு என்பது அவரவரின் கண்களே அன்றி வேறேதும் இல்லை (10) என்றும் உணர்ந்து கொள்கிறார்.

                                                            முற்றும் !


                        

    

                        


  

Saturday, May 31, 2008

Thodakkam



Nanbargale,
Sila Nernaglalil sila manidhargal.Sila Nerangalil alla , namadhu vaalkaiyin perum pagudhiyil kadavul nammodu ullar , oru silar kadavulai arindhu kolgirargal nammil palar arivadhilai.

தந்தையின் தாயைக் காண இரயில் பயணம்

            அது ஒரு காலம்.. இப்படி எல்லாருக்குமே ஒரு கடந்த  இல்லை  வசந்த காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா. எனக்கும் அப்படி இருந்தது.. வருட...