மன்னரும் குறிப்பறிவானும்
ஒரு சமயம் ,தெளிவ நாட்டை ஆண்டு வந்த மன்னர் மன்னன் ஒரு சிக்கலில் மாட்ட , மன்னர் எப்போதெல்லாம் சிக்கலில் மாட்டுகிறாரோ அப்போதெல்லாம் தெனாலி போல குறிப்பறிவானும் மன்னரை காப்பாற்றுவது தான் தலையாய கடமையாக இருக்கும். சரி, கதைக்கு வருவோம்.
சிக்கலில் மாட்டிய மன்னரை அவர் கூறாமலேயே காப்பாற்றுவது தான் நம் அமைச்சன் குறிப்பறிவானின் திறமை (1) . எப்போதும் போல மன்னரை இந்த முறையும் காப்பாற்ற அமைச்சனுக்கு பாராட்டோ பாராட்டு.
சபை கலைந்தது. மன்னர் தன் மாளிகைக்கு திரும்ப , சபையில் நடந்தததை அவர் விளக்க , அரசிக்கு மன நிம்மதி. அரசிக்கு குறிப்பறிவானை தெய்வத்துக்கு நிகராக எண்ணினார்(2). மேலும் மன்னனிடம் , குறிப்பறிவானை என்றென்றும் உங்களோடு வைத்துக் கொள்க , அதுவே நமக்கும் நம் ஆட்சிக்கும் நல்லது என்றார்(3).
மன்னர் மன்னன் அரசியின் சொற்களுக்கு செவி மடுத்தார். மேலும் அவருக்கு வியப்போ வியப்பு. தன்னை சிக்கலில் மாட்ட வைக்க நினைத்தவர்களின் மனத்தை தெரிந்து எப்படி தன்னை விடுவித்தார் என்று கேட்டறிய காவல் வீரனை அமைச்சனை கூட்டி வர உத்தர விட்டார்.
இத்தனை பிரச்சனைக்கும் காரணமான தலைமை அமைச்சனை நினைத்து வருந்தினார் அரசி. குறிப்பறிவானும் தலைமை அமைச்சனும் உறுப்போடு ஒத்திருந்து என்ன பயன்(4) ? தலைமை அமைச்சனுக்கு இருக்க வேண்டிய வல்லமை இல்லையே என்று வருந்தினார். எதிரியின் புறத்தை மட்டுமே கண்டு ஏமாறி , அவர்களின் அகத்தில் உள்ள உண்மையான குறிப்பை காணாமல் விட்ட அமைச்சனை பற்றிக் கூறி , எதிர்காலத்தில் இதுவே நமக்கு ஆபத்து என்று உணர்ந்தனர்(5).
குறிப்பறிவான் அரசனுக்கும் அரசிக்கும் வணக்கம் செலுத்தினார் . அரசன் அமைச்சரை உட்காரச் செய்தார். அரசிக்கு ஒரே ஆர்வம் , அமைச்சரின் சாதுரியத்தை அறிய ! . அமைச்சர் தான் முகத்தை வைத்தே அவரவரின் எண்ண ஓட்டங்களை அறிய கூடியவர் ஆச்சே !(6) அரசியார் கேட்கும் முன்பே அமைச்சர் இவ்வாறு சொன்னார் , "ஒருவரின் முகமே அவரவர் எண்ணங்களை வெளிப்படுத்தும் கண்ணாடி"(7). அமைச்சரின் இத்தகைய திறன்(8) பெற்று விளங்கும் அமைச்சரை கண்டு உளம் மகிழ்ந்தார் அரசி.
அரசரோ ஒருவரின் எண்ணங்களை தன் கண்கள் மூலமே எடைப்போட்டு , அவர் நட்பானவாரா இல்லை பகைமை உணர்வோடு(9) நம்மிடம் பழகுகிறாரா என்பதை ஆராய்ந்து தனக்கு உணர்த்துகின்ற அமைச்சரை ஆரத் தழுவிக் கொள்கிறார். மேலும் நுட்பமான அறிவு என்பது அவரவரின் கண்களே அன்றி வேறேதும் இல்லை (10) என்றும் உணர்ந்து கொள்கிறார்.
முற்றும் !
No comments:
Post a Comment